தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை அருகே காரில் இருந்த பட்டாசு வெடித்ததில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை அருகே தட்டார்மடம் அருகேயுள்ள சிறிய கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. பாலகிருஷ்ணன் என்பவர் சிறிய அளவில் அணைக்கரை என்ற பகுதியில் பட்டாசு ஆலையை நடத்தி வந்துள்ளார். இவர் கோவிலுக்கு தேவையானது, அரசு நிகழ்ச்சிகளுக்கு, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு தேவையான பட்டாசு தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வாணவேடிக்கை நிகழ்த்தக்கூடிய பட்டாசுகள் சிறிய அளவில் உள்ள பட்டாசுகளை அருகில் உள்ள கோவிலுக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள பட்டாசுகளை காரில் வைத்து விட்டு வீட்டுக்கு ரிட்டன் வந்தார்.. அப்போது குமரன்விளை என்ற கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த பட்டாசு வெடித்தது.. பட்டாசு இறுக்கம் காரணமாக வெடித்ததா? அல்லது வேறு காரணமா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு ஒரு மணி அளவில் வீட்டுக்கு போனபிறகு வெடி வெடித்துள்ளது.. பட்டாசு வெடித்ததில் கார் பீஸ் பீசானது.. இந்த விபத்தில் கார் பாகம், பட்டாசுகள் தெறிக்க 10க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்கள் எல்லாம் சேதமடைந்துள்ளது. மேலும் வீட்டின் அருகே நிறுத்தப்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த எதிர்பாராத விபத்தால் நள்ளிரவு மக்கள் பதட்டத்தோடு பயத்தில் எழுந்து இருக்கிறார்கள்.. இதனை பார்த்த பிறகு தொடர்ந்து, காவல் துறைக்கு மக்கள் தகவல் கொடுத்துள்ளார்கள்..
இதனை தொடர்ந்து தட்டார்மடம் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பாலகிருஷ்ணனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.. இதில், ஏற்கனவே பாலகிருஷ்ணன் இதற்கு முன்பு பட்டாசு ஆலை நடத்தி வந்தது தெரியவந்தது. 3 வருடத்திற்கு முன்பு அழகன்விளையில் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டதையடுத்து, சில நாள் கழித்து அணைக்கரை என்ற பகுதியில் பட்டாசு ஆலையை தொடங்கிய நிலையில், நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.