பாலா மற்றும் முத்துமலர் விவாகரத்து குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் 2004ஆம் வருடம் முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். இதுகுறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளதாவது,” திருமணத்தின் மீது பாலாவிற்கு விருப்பமில்லாமல் இருந்தது.
ஆனால் பெற்றோர்களின் வற்புறுத்தலால் கோடீஸ்வரரின் மகளான முத்து மலரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும். சண்டை அதிகமாகும்பொழுது பாலா வீட்டிற்கு வராமல் ஆபிஸிலேயே தங்கிவிடுவார். பாலா மனைவியின் மனதை புரிந்து கொள்ள மாட்டார். மேலும் அவரின் மீது அன்பு செலுத்த மாட்டார். இதனால் மனமுடைந்த முத்துமலர், தான் காலேஜில் படிக்கும்போது காதலித்த நபருடன் வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ளார். இதனால் பல பஞ்சாயத்துகள் நடந்தும் இருவரும் ஒத்து வராததால் நீதிமன்றத்தை அணுகி விவரத்தை பெற்றுள்ளனர். இதில் இருவரின் மேலும் தப்பு உள்ளது” என கூறியுள்ளார்.