Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடலில் கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஊழியர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திரு.வி.க நகர் பல்லவன் சாலையில் இருக்கும் சென்னை மாநகராட்சி விளையாட்டு திடலில் காயங்களுடன் கிடந்த ஒருவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெய்குப்பம் கிராமத்தில் வசித்த மணி என்பது தெரியவந்துள்ளது. இவர் தனது நண்பரான சேகர் என்பவருடன் சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூரில் தங்கி உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மணிக்கும் அதே குடியிருப்பில் வசிக்கும் சகோதரர்களான ஜெமினி, இளவழகன்  ஆகியோருக்கும் இடையே கஞ்சா புகைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மணி ரஞ்சித் குமார் என்பவரை அடித்துள்ளார். இதனால் ரஞ்சித் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணியை சரமாரியாக தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ரஞ்சித் குமார் உட்பட 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |