நடிகை கனகா கரகாட்டகாரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் பெயர் தான் இவருக்கு தற்போது வரை கரகாட்டக்காரன் கனகா என்றே ரசிகர்களால் அடையாளம் காணும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இவர் கடந்த 20 வருடங்களாக திரையுலகை விட்டு விலகியே இருக்கிறார் காதல் தோல்வியாழ் திருமணம் செய்து கொள்ளாமலேயே நடிகை கனகா வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி உடல்நல பிரச்சினையாலும் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் கடந்த வருடம் இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் திரை உலகை விட்டு விலகி பல வருடங்கள் ஆகிவிட்டதால் நான் என்ன செய்தாலும் அது பழையதாக மட்டுமே இருக்கும். அதனால் என்னுடைய மேக்கப் முதல் செருப்பு சிகை அலங்காரம் என அனைத்தையும் தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல மாற்றிக் கொள்ள வேண்டும். நடிக்க ஆர்வம் இருப்பதால் விரைவாக அதை கற்றுக் கொண்டு மீண்டும் கம்பேர் கொடுப்பேன் என்ற கனகா . இந்நிலையில் கனகா வீட்டில் நேற்று திடீரென்று புகை வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு துணிமணிகள் எரிந்து நாசமாகி கிடந்தது. மேலும் புகைந்து கொண்டு இருந்த தீயையும் அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அணைத்தார்கள். தீக்கான காரணம் என்ற விசாரணையில் பூஜை அறையில் விளக்கேற்றும் போது தீப்பொறி பட்டு வீட்டிற்கு தீ பரவியதாகவும் அதை கவனிக்காததால் மற்ற இடங்களுக்கும் தீ பரவி அங்கிருந்த துணிமணிகள் அத்தனையும் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது.
சொத்துக்களை தன்னிடமிருந்து யாராவது அபகரித்துக் கொள்வார்களோ என்ற பயத்திலேயே கனகா வெளியே தலை காட்ட தயங்குவதாகவும், நீண்ட நாட்களுக்கு பின் இன்றே வெளியே வந்துள்ளதாகவும் அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். சினிமாவில் கொடிகட்டி பறந்த கனகாவிற்கு எந்த நிலைமையா என்று ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.