Categories
தேசிய செய்திகள்

திடீரென்று இடிந்த கட்டிடம்…. பலியான 2 தொழிலாளர்கள்…. உ.பியில் சோகம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌதமபுத்தர நகரில் உள்ள பிரிவு 20 பகுதியில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. இதில் பல தொழிலாளர்கள் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு இந்த கட்டிடத்தின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 2 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவமானது நள்ளிரவு நேரத்தில் நடந்ததால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கு யாரும் வரவில்லை.

எனவே அவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களில் ஒருவரை மீட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ஒப்பந்ததாரர்கள் மற்றும் மற்றுமொரு தொழிலாளரை தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

Categories

Tech |