ராமேஸ்வரத்தில் கடல்நீரானது இன்று திடீரென்று 100மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கி இருக்கிறது. இதன் காரணமாக கடலிலுள்ள பவளப்பாறைகள் வெளியே தெரிகிறது. இதேபோல் சுவாமி சிலைகளும் தென்படுகிறது. அத்துடன் ராமேசுவரம், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
அக்னி தீர்த்த கடற்கரையில் கடலுக்கு உள்ளேயிருந்த பழைய சுவாமி சிலைகள் மற்றும் பவளப்பாறைகள் வெளியே தெரிகிறது. ஆகவே கடல் நீர் உள்வாங்கி கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் காற்றின் வேகமும் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் இருக்கிறது. கடல் நீர் உள்வாங்கி உள்ள சூழ்நிலையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கபட்ட படகுகள் தரைதட்டி நிற்கிறது.
இதற்கிடையில் படகுகளை மீட்கும் பணியில் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். காற்றின் வேகம் அதிகரித்தது, கடல் சீற்றம், கடல்நீர் உள்வாங்கியது, கடல் கொந்தளிப்பு போன்றவற்றை முன்னிட்டு அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு இன்று முன்னெச்சரிக்கையாக மீன்பிடிக்க போகவில்லை.