Categories
மாநில செய்திகள்

100மீ உள்வாங்கிய கடல்…. தென்படும் சாமி சிலைகள்…. பெரும் பரபரப்பு…!!!

இன்று ராமேஸ்வரம் கடல் திடீரென்று 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியதால் கடலில் உள்ள பவளப் பாறைகள் மற்றும் சாமி சிலைகளும் வெளியே தென்படுகின்றன. ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றத்துடன் காணப்படுவதோடு மட்டுமல்லாமல் கடல் நீர் உள்வாங்கியதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

இதனால் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி நிற்கிறது. இவற்றை மீட்கும் பணியில் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Categories

Tech |