ஆவின் பாலகத்தில் தீவிபத்து ஏற்பட்டு கடையின் மேற்கூரை பகுதி எரிந்து நாசமானது.
விழுப்புரம் மாவட்டம், ஜானகிபுரம் பகுதியில் வசித்து வருபவர் சசிகுமார். இவர் ஜானகிபுரம் புறவழிச்சாலையின் அருகில் ஆவின் பாலகம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை எதிர்பாராவிதமாக திடீரென்று தீப்பற்றியது. இதுகுறித்து சசிகுமார் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார்.
இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் மேற்கூரை பகுதி மட்டும் எரிந்து நாசமாகியது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.