Categories
தேசிய செய்திகள்

திடீரென்று வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்….”திறந்து பார்த்த வீட்டின் உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி”..!!

வீட்டில் இருந்து அதிக அளவு துர்நாற்றம் வந்ததால் வீட்டின் உரிமையாளர் வீட்டை திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

பல்லாரி மாவட்டம், சண்டூர் என்னும் கிராமத்தின் அருகே 30 வயதான ஆஷிஷ் என்பவர் அவரது மனைவி மாலாவுடன் வந்து தங்கி இருந்தார். அவர் இதற்கு முன்பாக மேற்குவங்கத்தில் ஒரு கிராமத்தில் வசித்த கூறினார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் அவர்களுக்கு வீடு வாடகைக்கு விட்டிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவரின் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது.

அவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று இருக்கலாம் என்று எண்ணி வீட்டின் உரிமையாளர் விட்டுவிட்டார். இதையடுத்து இரண்டு நாட்கள் கழித்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வர ஆரம்பித்தது. இந் நிலையில் வீட்டின் மற்றொரு சாவியை வைத்து  வீட்டை திறந்து பார்த்த போது ஆஷிஷ் கை கால்கள் கட்டப்பட்டு கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இவர் இறந்து இரண்டு நாட்கள் ஆனது என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருடன் இருந்த மாலா தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் அவர்தான் கொலை செய்து இருப்பார் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |