Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திடீரென அதிகரித்த பிரசவ வலி….. விரைந்து செயல்பட்ட மருத்துவ உதவியாளர்….. குவியும் பாராட்டுக்கள்….!!

ஆம்புலன்சிலேயே பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் மருதபாண்டி- பிரபாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த பிரபாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் லெப்பை குடிக்காட்டில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக பிரபாவதியை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதியில் சென்ற போது திடீரென பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராஜா வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டார். இதனை அடுத்து மருத்துவ உதவியாளர் இளையராஜா பிரசவம் பார்த்ததில் பிரபாவதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் தற்போது நலமாக இருக்கின்றனர்.

Categories

Tech |