உயர் மின்னழுத்த கம்பி வீடுகள் மீது அறுந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அனல் மின் நிலையத்திலிருந்து தண்டையார்பேட்டை உயர்மின் அழுத்த மின்கம்பி செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் திருவொற்றியூர் மேற்கு பகுதி கார்கில் வெற்றி நகர், முகிலன் தெரு பகுதிகளில் மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. சுமார் 250 மீட்டர் நீளம் கொண்ட உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் லேசாக சேதமடைந்தது. இதுகுறித்து தானியங்கி மூலம் மின்வாரிய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.