குஜராத் மாநிலத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் புதிதாக 3 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.அந்த கட்டிடம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளில் பத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.மேலும் சம்பவத்தின்போது கட்டிடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.சம்பவம் பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு குழுவினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்த கட்டிடம் 30 ஆண்டுகள் மிகப்பழமையான கட்டிடம் என்றும் தற்போது அது புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.