Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த 4 அடுக்கு கட்டிடம்… பரிதாபமாக உயிரிழந்த 2 சிறுவர்கள்…. சோகம்…!!!

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் அந்த வழியாக சென்ற 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்களின் மீது கட்டிடம் விழுந்ததில் அவர்கள் படுகாயமடைந்து உயிரிழந்தனர். இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் படையினர் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் கட்டிடம் திடீரென எப்படி இடிந்து விழுந்தது என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |