பலத்த மழையின் காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் உள்ள சேபால் நகரில் ஒரு 4 மாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 1 பார், 1 தாபா, 1 வங்கி மற்றும் சில வணிக நிறுவனங்கள் இருக்கிறது. இந்தப் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது.
#WATCH | Himachal Pradesh: A four-storey building collapsed in Chopal town in Shimla amid heavy rainfall. The building was already vacated by the local administration pic.twitter.com/FiJbCLty9r
— ANI (@ANI) July 9, 2022
அப்போது திடீரென 4 மாடி கட்டிடம் மழைக்கு தாக்குபிடிக்காமல் இடிந்து விழுந்தது. இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும் கட்டிடம் இடிந்து விழும் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.