நடிகர் விஜயின் மகன் சஞ்சய்யின் வீடியோ ஒன்று திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் தளபதி 65 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யின் வீடியோ ஒன்று திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறது. சஞ்சய் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்து வந்தார் . விரைவில் இவர் தமிழ் திரையுலகில் நடிகராகவோ அல்லது இயக்குனராகவோ அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தற்போது சஞ்சய் இசையை ரசித்து கேட்டுக் கொண்டே காரில் செல்லும் இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
https://twitter.com/IamJasonSanjay/status/1400063355650416647