Categories
உலக செய்திகள்

திடீரென இந்தியா மீது பாசமழை பொழியும் வல்லரசு நாடுகள்…!! இதுதான் காரணமாம்….!!!

உலகிலேயே பெருமளவிலான ஆயுத சந்தையை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவிடம் உள்ள ஆயுதங்களில் பெரும்பாலானவை ரஷ்யாவிடம் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். ரஷ்யாவிடமிருந்து மட்டும் ஆயுத இறக்குமதி செய்யவில்லை என்றால் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆயுத பற்றாக்குறையால் திண்டாடி விடுவோம். தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்ய போரால் இந்தியாவுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. ஒருபுறம் இந்தியாவிடம் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு அதிகரிக்க மற்றொரு புறம் இந்தியாவை ஆயுதங்கள் வாங்கிக் கொள்ளுமாறு கூறி வல்லரசு நாடுகளை வழிய வந்து நிற்கின்றன. இதற்கு முழு முதற் காரணமாக பார்க்கப்படுவது இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவதுதான்.

தற்போது அனைத்து வல்லரசு நாடுகளும் ரஷ்யாவை எதிர்த்து வரும் நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து விட்டன. இந்நிலையில் இந்தியா மற்றும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்காமல் ரஷ்யாவுடனான வர்த்தகங்களில் ஈடுபட்டுவருகிறது. அதில் முக்கியமான ஒன்று ஆயுத சப்ளை. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் ஆயுதங்களை ஒட்டுமொத்தமாக முறியடிக்க வேண்டும் அதற்காக பல வல்லரசு நாடுகள் எங்களிடம் ஆயுதங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என இந்தியாவிடம் தாங்களாகவே முன்வந்து கேட்கும் அளவிற்கு வந்து விட்டன.

Categories

Tech |