மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டியில் ரவிச்சந்திரன்-சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 2-வது மகன் சார்லஸ் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை சார்லஸ் புனேவில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் 10 நாட்கள் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்து சார்லஸ் பணி மாறுதல் பெற்ற ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் ராணுவ தளத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அவர் இறந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. சார்லஸுக்கு அனிதா என்ற மனைவியும், பிறந்து 10 மாதமே ஆன பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் குடும்பத்தினரிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.