ஜேர்மனி நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் உக்ரைன் நாட்டின் துறைமுக நகரமான ஒடேசாவிற்கு முன் அறிவிப்பின்றி பயணம் செய்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 6 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கின்றது. இங்கு ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக, உக்ரேனியர்களுக்கு உதவுவதற்காக ஜேர்மனி இதுவரை 719 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு முன் அறிவிப்பு ஏதுமின்றி பயணம் மேற்கொண்ட ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட், ஜேர்மன் வழங்கிய ஜெபர்ட் Antiaircraft Tank-ஐ ஆய்வு செய்துள்ளார்.
அதன் பின்னர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் கூறியதாவது, “இந்த ஆயுதம் முக்கியமான உள்கட்டமைப்பட்டு பாதுகாக்கவும், ரஷ்ய வான் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்க உதவும். வேறு எந்த நாடுகளும் தற்போது இது போன்ற வாகனங்களை வழங்கவில்லை. ஜேர்மனி ஒருதலைப்பட்சமாக அவ்வாறு செய்யாது. ஜேர்மனி தனது கூட்டாளர்களுடன் இதுபோன்ற முக்கிய முடிவுகளில் ஒன்றிணையும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவின் உத்வேகத்தை கவனமாகப் பார்க்கும்போது மால்டோவாவிற்கு இராணுவ உதவியை அதிகரிப்பதாக உறுதியளித்த கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட், ஆதரவு விவரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளர்.