தமிழ் திரையுலகில் கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்களின் இதயங்களில் நிறைந்துள்ள நடிகை குஷ்பு, வெள்ளித் திரையில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து சாதனை படைத்திருக்கிறார். அண்மையில் இவர் சின்னத்திரையிலும் வலம் வந்து தாய்மார்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தார். சினிமா, அரசியல் இவற்றையெல்லாம் தாண்டி அண்மையில் தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன் உடல் எடையை அவர் வெகுவாக குறைத்தார்.
அவரது உடல் மெலிவுக்கு காரணம் என்ன..? என்று அனைவருமே யோசித்துக்கொண்டிருந்த நிலையில் அதற்கு விடை தெரியவந்துள்ளது. விஜய் ஸ்ரீஜி இயக்கும் ஒரு புது திரைப்படத்தில் குஷ்பு, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக 80களில் முன்னணி கதாநாயகனாக ஜொலித்த மோகன் நடிக்கிறார். இந்த திரைப்படத்துக்காக இயக்குனர் விஜய் ஸ்ரீஜி மிகவும் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதால் தன் உடல் எடையை குஷ்பு கஷ்டப்பட்டு குறைத்து இருக்கிறார். மெலிவான குஷ்புவை மீண்டுமாக திரையில் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.