Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென உடைந்த எரிவாயு குழாய்…. அலறியடித்து ஓடிய மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் நிறுவனத்தின் சார்பில் 24 மணி நேர எரிவாயு வழங்க குழாய் பதிக்கும் பணி நடைபெற்ற வருகிறது. அதன்படி கோவை விளாங்குறிச்சி- தண்ணீர் பந்தல் சாலை பகுதியில் இந்திரன் ஆயில் கார்ப்பரேஷன் எரிவாயு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் கடந்த 8 ஆம் தேதி முதல் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது. இந்த எரிவாயு குழாய்கள் வழியாக சோதனைக்காக நேற்று அதிக அழுத்தத்துடன் காற்று செலுத்தப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. அப்போது திடீரென எரிவாயு குழாயில் ஒரு இடத்தில் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிக அழுத்தத்துடன் செலுத்தப்பட்ட காற்று வெளியேற தொடங்கியது. இதனையடுத்து பயங்கர சத்தத்துடன் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த சத்தத்தை கேட்ட பொதுமக்கள் அலறடித்து ஓட்டம் பிடித்தவர். மேலும் அந்த சாலை முழுவதும் சேறும், சகதிமாய் மாறியதும் இந்த விபத்தில் பொதுமக்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தையடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் எரிவாயு குழாய் பரிசோதனை செய்யும் பணியை நிறுத்தி உள்ளனர். அப்பகுதி முழுவது எரிவாயு குழாயில் எரிவாயு செலுத்தப்பட்ட போது வெடித்ததாக வதந்தி பரவியது. இதனால் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |