அமெரிக்க கண்டத்தின் பசிபிக் தீவுக்கு உட்பட்ட பகுதியில் தன்னாட்சி குடியரசாக உள்ள பலாவ் நாட்டில் மெலிகியோக் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தென்கிழக்கே 1,165 கி.மீ. தொலைவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 5.01 மணியளவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் சுமார் 50 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.