மெக்சிகோவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வட அமெரிக்கா நாட்டில் மெக்சிகோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:05 மணிக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்கோகன் மாகாணத்தின் எல்லைக்கு அருகில் 9.4 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. மேலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அலறிஅடித்த்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.