குயிங்காய் மகாணத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சீன நாட்டில் குயிங்காய் மகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மக்கள் குறைவான இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரபட்டதாகவும் மேலும் இதன் மையத்தில் இருந்து 20 கிலோமீட்டர் வரை எந்த கிராமங்களும் இல்லை என்றும் தெலிங்கா நகர அவசர கால மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் தெலிங்கா நகரம், ஜியூகுவான், ஜியாயுகுவான் மற்றும் ஜாங்கியே ஆகிய இடங்களில் மக்களால் உணரப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தால் இந்தப் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த பல்வேறு ரயில்கள் காலதாமதமாக வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது.