தெற்கு பிலிப்பைன்ஸில் திடீரென ரிக்டர் அளவுகோலில் 5. 8 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தெற்கு பிலிப்பைன்சில் உள்ள சூரிகாவோ டெல் சுர் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இன்று அந்நாட்டின் நேரப்படி மாலை 6.24 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் பயாபஸ் நகரில் இருந்து வடகிழக்கில் 75 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் தரைப்பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வுகள் அகுசன் டெல் சுர் மற்றும் சூரிகாவோ டெல் நோர்ட்டோ ஆகிய இடங்களில் உணரப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து இந்த நிலநடுக்கம் எந்த சேதமும் ஏற்படுத்தாது என பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.