தென் அமெரிக்காவில் திடீரென ரிக்டர் அளவுகோலில் 6. 6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தென் அமெரிக்கா நாட்டில் அர்ஜென்டினாவில் ஜூஜூய் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இன்று அதிகாலை அந்நாட்டு நேரப்படி 4:36 மணியளவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதாக தெரியவில்லை. அதேபோல் பொருள் சேதம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.