கிரீஸ் நாட்டில் 5.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாட்டில் கிரீசின் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள கொரிந்த் வளைகுடாவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலநடுக்கம் 12.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் கிரீசின் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் பெலோபொன்னீஸ் பகுதியிலும் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.