Categories
தேசிய செய்திகள்

திடீரென உயர்ந்த தக்காளி விலையால்…. 2 பேர் பரிதாப உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஸ்வத்ராவ் (55). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தக்காளி பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தக்காளியின் விலை திடீரென உயர்ந்ததால் தக்காளியை யாரும் பறித்து சென்று விடக்கூடாது என்பதற்காக தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அதே கிராமத்தை சேர்ந்த வசந்த குமார்(31) என்பவர் அந்த தோட்டத்தில் தக்காளியை திருட சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின்வேலியில் சிக்கி கொண்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதனால் கோபமடைந்த வசந்தகுமாரின் குடும்பத்தினர்  அஸ்வத்ராவ்வை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கவுரிபிதனூர் போலீசார் அஸ்வத்ராவின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர். தக்காளிக்காக இரண்டு உயிர் பறி போன சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |