Categories
மாநில செய்திகள்

திடீரென உயர்ந்த தக்காளி விலை…. 1 கிலோ எவ்வளவு தெரியுமா?…. இல்லத்தரசிகள் ஷாக்….!!!!

கனமழை பெய்து வருவதால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா மற்றும் ஆந்திரா  மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி மற்றும் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆந்திரா  மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தக்காளிகள் குறைந்த அளவில்  கோயம்பேடு சந்தைக்கு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலையை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது. கர்நாடகா மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே  விலை  அதிகரித்துள்ளது என கூறியுள்ளனர்.

Categories

Tech |