கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி என்ற மாவட்டம் சிரவாரா என்ற கிராமத்தில் வசித்து வந்த சேகர் மற்றும் ரங்கம்மா தம்பதியரின் 12 வயது மகன் பாஸ்கர் நேற்று முன் தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டிற்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்து விட்டான். இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்ட பெற்றோர் முகநூலில் படித்த ஒரு பதிவை உண்மை என நினைத்து அதனை அப்படியே செய்துள்ளனர்.
அதாவது தண்ணீரில் விழுந்த சிறுவனின் மீது உப்பை கொட்டினால் இரண்டு மணி நேரத்தில் உயிர் பிழைத்துக் கொள்வான் என்ற பதிவை அவர்கள் படித்த நிலையில் 80 கிலோ உப்பை வாங்கி வந்து பாஸ்கரனின் சடலத்தின் மீது கொட்டினர். உயிரிழந்த மகன் மீண்டும் உயிர்பிழைத்து வந்துஎன்று கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் காத்திருந்த பெற்றோருக்கு தோல்வி தான் கிடைத்தது.இறுதியில் பாஸ்கர் மீது கொட்டப்பட்டிருந்த உப்பு குவியல் அகற்றப்பட்டு அதன் பிறகு சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.