Categories
தேசிய செய்திகள்

திடீரென உயிரிழந்த மனைவி…. துடிதுடிக்க 4 குழந்தைகளை கொன்று கணவர் செய்த செயல்…. மனதை உலுக்கும் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழந்த சோகம் தாங்காமல் 46 வயதுடைய கணவர் அவரது நான்கு குழந்தைகளையும் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரும்பூஞ்சை பாதித்து தனது மனைவி ஜெயா உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத கோபாலா (46), தனது பிள்ளைகள் சௌமியா (19), ஸ்வேதா (16), ஷாஜி (11) மற்றும் ஸ்ருஜன் (8) ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் அதனை அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரும் அவருடைய குழந்தைகளும் ஜெயா இல்லாமல் தங்களால் வாழ முடியாது என்று உறவினர்களிடம் கூறிக்கொண்டே இருந்தனர். அதனால் இந்த முடிவினை எடுத்து உள்ளனர் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |