Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென உயிரிழந்த வாலிபர்…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…. பெரும் பரபரப்பு…!!

வாலிபர் இறந்த அதிர்ச்சியில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மூர்‌ பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த 17-ஆம் தேதி ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லோகேஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த லோகேஷின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ராணிப்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |