Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென உள்வாங்கிய கிணறு… குடிநீருக்கு திண்டாடிய மக்கள்… அதிகாரிகள் வாக்குறுதி..!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தி வந்த கிணறு திடீரென உள் வாங்கியது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே கோவில்பத்து கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே சமுதாய கிணறு ஒன்று உள்ளது. இது அரசு புறம்போக்கு இடத்தில் இருக்கிறது. இந்த கிணறு 12 அடி அகலத்தில் 28 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அந்த பகுதி மக்கள் இந்த கிணற்று நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர். இந்த சமுதாயக் கிணறு கடந்த 22-ஆம் தேதி அன்று திடீரென உள்வாங்கியது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் விமலா, தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் செல்வராஜ் மலர்விழி, ஆகியோர் கிணற்றை பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து கிணற்றை முழுவதுமாக மூடும் போடும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்களுக்கு வேறு கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சமுதாய கிணறு அரசு அனுமதி பெற்று வேறு அரசு இடத்தில் விரைவில் அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |