கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை எதிரே இருக்கும் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் அரசு தலைமை மருத்துவமனை எதிரே இருக்கும் பாதாள சாக்கடை மூடி வாகனங்கள் வந்து செல்வதால் உடைந்து காணப்பட்டுள்ளது நேற்று திடீரென அந்த மூடி உடைந்து அதன் அருகே இருந்த சாலை உள்வாங்கி 12 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.
அந்த சமயம் அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு நெல்லிக்குப்பம்-கடலூர் சாலை அடைக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் உத்தரவின்படி பாதாள சாக்கடையால் ஏற்பட்ட பள்ளத்தை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.