Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தகராறு….. சரமாரியாக தாக்கி கொண்ட நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் காவல்துறையினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்ரமங்கலம் பகுதியில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார், தென்னரசு ஆகிய நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நாகமங்கலம் தனியார் பள்ளி அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது நண்பர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து அன்பரசன் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் விக்ரமங்கலம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |