திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டியில் இருந்து முனைஞ்சிப்பட்டிக்கு செல்லும் சாலையில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது. இதற்கு அருகே முட்புதர்கள் நிறைந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.