Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து… கருகி செத்த 5 ஆயிரம் உயிர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே 5 ஆயிரம் கோழிகள் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கருகி செத்தன.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியசாமி என்பவர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். இவர் 5 ஆயிரம் கோழி குஞ்சுகளை வாங்கி கோழி பண்ணையில் சமீபத்தில் வளர்த்து வந்தார். இந்நிலையில் கோழிப்பண்ணையில் திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த தீ அனைத்து இடங்களிலும் மளமளவென பிடித்து பரவியது. இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் ஐந்தாயிரம் கோழிகள் கருகி செத்தன. இதுகுறித்து வி.களத்தூர் காவல்துறையினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் முதல்கட்ட விசாரணையில் விவசாயி ஒருவர் கோழிப்பண்ணைக்கு அருகே உள்ள சோளத்தட்டைக்கு தீ வைத்த போது தீ பரவியது என்று தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |