பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கணினிகள் எரிந்து நாசமாகிவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடசேரிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் இருக்கும் ஒரு அறையில் கணினிகள் மற்றும் அறிவியல் உபகரண பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கணினிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணினி அறையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 3 கணினிகள் எரிந்து நாசமாகிவிட்டது. பள்ளி நேரம் முடிந்த பிறகு தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.