தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுக்கிரன் விடுதி வெள்ளாள கொல்லையில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான தைல மர காடு உள்ளது. இந்த தைல மரக்காட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.