Categories
தேசிய செய்திகள்

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்… 3.7 ரிக்டர் அளவு பதிவானதால்… அச்சத்தில் வடமாநில மக்கள்…!!

மிசோரத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதில் ரிக்டர் அளவு 3.7 ஆக பதிவாகியுள்ளது.

மிசோரம் மாநிலம் லுங்க்லே நகரில் இன்று காலை 9 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக அசாம் போன்ற வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் மிரோசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பயத்தில் சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.

Categories

Tech |