திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
நேபாள நாட்டின் தலைநகர் காட்மண்டுவில் இருந்து 147 கிலோ மீட்டர் தொலைவில் திக்தெல் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் திடீரென காலை 7:58 மணி அளவில் பயங்கர நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 5.5 பதிவாகியுள்ளது. இந்நிலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட பொருட் சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.