Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு…. 7 பேர் பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

நிலச்சரிவில் சிக்கி 7 பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் நாட்டில் உள்ள கர்பலா நகரில் சியா முஸ்லிம் பிரிவினரின் வழிபாட்டு தளம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று முஸ்லிம்கள் பலர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு வழிபாட்டுத்தளத்தின் மேற்கூரை மீது மண் சரிந்து விழுந்ததில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக இறந்ததோடு 3 குழந்தைகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |