Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட பள்ளம்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

விவசாயியின் நிலத்தில் 10 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேத்தி பாலாடா பகுதியில் பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு உள்பட பல்வேறு வகையான காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக விளைநிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் தோட்டங்களுக்கு நடுவில் கால்வாயும் செல்கிறது. இந்நிலையில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு நேரம் ஆக ஆக அது பெரிதாகிக்கொண்டே சென்றதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது

இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது பள்ளம் ஏற்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் யாரும் செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் ஆழ்துளை கிணறு அமைந்துள்ளது. எனவே பூமிக்கு அடியில் தண்ணீர் ஊறி பள்ளம் ஏற்பட்டு, ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் பள்ளத்தில் தேங்கி நின்றுள்ளது. இதுகுறித்து புவியியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்யப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |