Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட பிரசவ வலி…. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. பொதுமக்கள் பாராட்டு…!!

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள செண்பகபுரம் மேலத்தெருவில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலாவதி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நீலாவதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் நீலாவதியை ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நீலாவதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை செண்பகபுரம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |