மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளுக்கு நடைபெற்ற திருமணம்தொடர் மின்வெட்டு காரணமாக இருவரும் வெவ்வேறு மாப்பிள்ளைகளை தவறாக மாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயின் என்ற மாவட்டத்தில் ரமேஷ்லாலின் இரண்டு மகள்களுக்கு பல்வேறு குடும்பங்களை சேர்ந்த இரு மண மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
மணப்பெண்கள் இருவரும் தலையை மூடி ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து இருந்த நிலையில் தொடர் மின்வெட்டு காரணமாக மின்சாரம் இல்லாத காரணத்தால் இருவருக்கும் மாப்பிள்ளைகளை மாற்றி திருமணத்தை நடத்தினர். இதனையடுத்து மணப்பெண்கள் மணமகன்களின் இல்லத்தை அடைந்த போது தான் இந்தத் தவறு குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் இந்த மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மூன்று குடும்பங்களுக்கும் இடையே பெரும் தகராறு ஏற்பட்டது. இருந்தாலும் அதன் பிறகு இரு குடும்பத்தினரும் சமரசம் செய்துகொண்டு சரியான மணமகனும் மணமகளும் மறுநாள் மீண்டும் ஒருமுறை திருமண சடங்குகளை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது.