Categories
சென்னை மாநில செய்திகள்

திடீரென ஏற்பட்ட வயிற்று வலி….. கூல்ட்ரிங்க்ஸ் குடித்த பெண் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

சென்னை மணலியில் வயிற்று வலி காரணமாக கூல்ட்ரிங்ஸ் குடித்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணலி ஜாகிர் உசேன் தெருவில் செல்வி என்ற பெண் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு நேற்று மதியம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்ட அவரது ஆண் நண்பர் சதாசிவம் அருகில் இருந்த பெட்டிக்கடையில் இருந்து எலுமிச்சை கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.

அதை குடித்து செல்வி திடீரென வாயில் நுரை தள்ளியபடி மயங்கி சுருண்டு உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் செல்வியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த அறிக்கை வந்த பிறகு தான் செல்வி வயிற்று வலி காரணமாக உயிரிழந்தாரா அல்லது காலாவதியான குளிர்பானம் குடித்த உயிரிழந்தாரா என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

Categories

Tech |