சென்னை பூந்தமல்லியில் லாரி ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துகளில் 6 வாகனங்கள் சேதமடைந்தன. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கோயம்பேட்டிற்கு காங்க்ரீட் கலவை ஏற்றிச் சென்ற லாரி பூந்தமல்லி அருகே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் இருந்த கார், பைக் உள்ளிட்ட 6 வாகனங்களை மோதித்தள்ளியது.
அதை கண்டதும் அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். லாரி ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் என பின்னர் தெரியவந்தது. மயங்கியிருந்த லாரி ஓட்டுநர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தில் இருவக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 5 வாகனங்கள் சேதமடைந்துள்ளது. லாரி மெதுவாக வந்ததால் பெரிய விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.