Categories
தேசிய செய்திகள்

திடீரென ஏற்பட்ட வெடி விபத்து…. 5 தொழிலாளர்கள் உடல் கருகி பலி…. தேடும் பணி தீவிரம்…!!!!

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள பருச் பகுதியில் இயற்கை ரசாயனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் விபத்து நடந்த இடத்தில் ஒருவரை கூட காணவில்லை எனவும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர்.  இந்த விபத்துக்கனா முழு விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Categories

Tech |