Categories
உலக செய்திகள்

“திடீரென ஒளிர்ந்த வானம்” வானிலிருந்து விழுந்தது என்ன…? வெளியான பரபரப்பு வீடியோ…!!

வானில் இருந்து தீப்பந்து ஒன்று விழுந்துள்ள சம்பவம் ஜெர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் இரவில் திடீரென வானம் 7 வினாடிகள் பளிச்சென ஒளிர்ந்து, தீப்பந்து ஒன்று வானில் இருந்து விழுந்துள்ளது. அந்த பளிச்சென்று ஒளிக்கீற்று ஐந்து முதல் ஏழு வினாடிகளுக்கு ஒளிர்ந்து பின்னர் படிகப்பச்சை நிறத்திற்கு மாறி இரண்டாகப் பிரிந்து முடிவடைந்துள்ளது. இதை பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், ஜெர்மன் வானியல் நிலையமும் உறுதி செய்துள்ளன. இது குறித்து ஜெர்மன் வானியல் நிலையத்தை சேர்ந்த நிபுணர் Dieter Heinlein கூறுகையில், அது ஒரு விண்கல்லின் துண்டாக இருக்கலாம் என்கிறார்.

இந்த அபூர்வமான நிகழ்வு நடந்த சில மணி நேரத்தில் 90 பேர் வரை பார்த்து தங்களுக்கு தகவல் தெரிவித்ததாக பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் Jurgen Oberst கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்வு வாகனமொன்றில் பொருத்தப்பட்ட டேஸ் கேம் கேமராவில் பதிவான, ரைன் நதிக்கு மேல் பாய்ந்து செல்லும் அந்த விண்கல்லை காட்டும் வீடியோ ஒன்றை உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

https://youtu.be/ym7R3cxU8TE

Categories

Tech |