இமாசலப் பிரதேசத்தில் கார் கவிழ்ந்து விழுந்து விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசம் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் கிராமம் அருகே பச்சட் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று துணை ஆணையர் ஆர்.கே கௌதம் தெரிவித்துள்ளார். கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.