Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி…. மின் கம்பத்தின் மீது மோதியதால் பரபரப்பு…. காவல்துறையினர் எச்சரிக்கை….!!!

திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு ஒரு லாரி விறகு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை அன்பு என்பவர் ஓட்டி சென்றார். இந்த லாரி வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்தின் மீது லேசாக உரசி ஒரு மின் கம்பத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்ததோடு, மின் கம்பமும் சரிந்து விழுந்தது.

இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து வால்பாறை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாலையில் கிடந்த மின் கம்பத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் மலை பாதையில் அடிக்கடி விபத்து நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |